2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற களஞ்சியசாலையிலிருந்த தங்கக்கட்டிகள் மாயம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்கு பொருள்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த 8 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்ககட்டிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வாழைத்​தோட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வழக்கு பொருட்கள் களஞ்சியசாலைக்கு பொறுப்பானவரால் இந்த மாதம் முதலாம் திகதி மாலை வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாளிகாவத்த பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 79.80 கிராம் நிறையுடைய தங்ககட்டி, பொரல்ல பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட104.39 கி​ராம் நிறையுடைய தங்ககட்டி மற்றும் உருக்கப்பட்ட 204.24 கிராம் நிறையுடைய தங்கமும் இவ்வாறு காணாமல் போயுள்ளது என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .