2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நோர்வூட்டில் அதிரடி ; என்.சி 6 கிலோ சிக்கியது

Editorial   / 2021 ஜூலை 23 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார இலங்கதிலக்க

பாடசாலை மாணவர்கள், மேலதிக வகுப்புகளுக்குச் செல்வோர், ஓட்டோ சாரதிகள் உள்ளிட்டவர்களை இலக்குவைத்து, கொண்டுவரப்பட்ட என்.சி என்றழைக்கப்படும் போதையூட்டும் ஒரு​வகையான தூளை நோர்வூட் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஓட்டோ உட்பட மூவ​ர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், அவரிகளிடமிருந்தும் அவர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரமும் ஆறு கிலோ 400 கிராம் என்.சி கைப்பற்றப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் தெரிவித்தார்.

16 பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 400 கிராம் நிறையில் பொதிசெய்யப்பட்டிருந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 ஓட்​டோவொன்றில் 400 கிராம் என்.சி, விற்பனைச் செய்வதற்காக எடுத்து செல்லப்படுகின்றமை தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, ஓட்​டோ சுற்றிவளைக்கப்பட்டது.

அதன்போது கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களை அடுத்து, நோர்வூட் நகரிலுள்ள வர்த்தக நிலைய​மொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கிருந்து 400 கிராம் நிறையைக் கொண்ட மேலும் 13 பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நோர்வூட் நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால், இந்த என்.சி, எனும் போதையூட்டும் தூள், கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வர்த்தகரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய வேளையில், 400 கிராம் நிறைகொண்ட மேலும் இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த 400 கிராம் நிறையைக் கொண்ட என்.சி, பக்கற் ஒன்று 6,000 ரூபாய்க்கும், 20 கிராம் நிறையைக்கொண்ட பக்கற்றொன்று 300 ரூபாய்க்கு சில்லறைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட, போதையூட்டும் என்.சி. பக்கற்றுகளையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று (23) முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட என்.சி. போதையூட்டும் பொருளின் உள்ளூர் சந்தைப்பெறுமதி ஒரு இலட்சம் ரூபாயாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .