2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டுள்ளது.

தேச பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது எனக் கூறி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என பலரது அலைபேசி உரையாடல்களை, பெகாசஸ் என்னும் செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக்கேட்டது என்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இது குறித்து இந்திய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பியிருந்தன

பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஊடகவியலாளர் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 13ஆம் திகதி முடிவடைந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கமைய, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மேலும், இந்த குழு 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த குழு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் இயங்கும் எனவும் தீர்ப்பளித்தது.

அத்துடன், மத்திய அரசுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. தேச பாதுகாப்பு என்ற வளையத்தில் மத்திய அரசு தப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் இதன் போது சுட்டிக்காட்டியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .