2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் முழு யாக இலங்கையுடன் நிற்கிறது

Editorial   / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாக்கிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளார். தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதங்களுக்குப் பிறகு, இலங்கைக்கு ஒற்றுமையைத் தெரிவிக்க இது உதவும் என்றும் கூறினார்.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், செவ்வாய்க்கிழமை (09) அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அன்வர், இந்த கடினமான நேரத்தில் பாகிஸ்தான் முழு ஒற்றுமையுடனும் உண்மையான அனுதாபத்துடனும் இலங்கையுடன் நிற்கிறது என்றார்.

 

“இலங்கை அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் காட்டிய தைரியத்தையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். நமது இலங்கை சகோதர சகோதரிகளுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X