2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பணிப்பாளர்களுக்கு பயணத்தடை

Freelancer   / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக கடத்தலின் பிரதான சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் சபையைச் சேர்ந்த அறுவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.

சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய கொழும்பு-15, கஜீமா வத்தை பகுதியைச் சேர்ந்த 41 வயதான  தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
சந்தேக நபருடன் தொடர்புடையவர்களை வெளிக்கொணர வேண்டுமாயின் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிபி பீரிஸ், மன்றில் கோரி நின்றார்.

மேலும், வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்தார்.

அவரது கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான் மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்ததுடன்,  சந்தேக நபரை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .