2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை’

Nirosh   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்த பொதுமக்கள் குழப்படையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு பிரிவு விழிப்புடன் செயற்பட்டு வருதாகவும், நாட்டின் பாதுகாப்பு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் அமைதியை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமுல்ப்படுத்தப்படுவதுத் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கடந்த 14ஆம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான மின்னஞ்சல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதன் பின்னர் கட்டுநாயக்க, மத்தளை சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த மின்னஞ்சல் தொடர்பில் சி.ஐ.டியினர், அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேபோல் டிஜிடல் தடயவியல் நிபுணர்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதேவேளை இந்த மின்னஞ்சல் பங்களாதேஷின் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் மின்னஞ்சல் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .