2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’போராட்டங்களை ஒழிக்கவே பயணக்கட்டுப்பாடுகள்’

Nirosh   / 2021 ஜூன் 15 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக்கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா, எரிபொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட    அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான, மக்களின் போராட்டங்களை ஒழிப்பதற்கே பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், எல்லாப் பக்கங்களிலும் அரசாங்கமும் நாடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதென்றார்.

இலங்கைக்கு கிடைத்துவந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இல்லாதுபோகும் நிலை காணப்படுகிறது. ஐரோப்பிய பாராளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த வரிச் சலுகையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதற்கு யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் படுதோல்வியையே இது  காட்டுவதாகவும், பயங்கரவாதத்  தடைச் சட்டத்தை நீக்காமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிரானவர்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள், மனித உரிமை மீறல், அரச நிறுவனங்களின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை அமர்த்தி, சிவில் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்துகின்றமை உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போகும் நிலை ஏற்படுவதற்குக் காரணமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .