2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பருத்தித்துறை வீதியை திறக்கும் கோரிக்கை நிராகரிப்பு

Editorial   / 2025 ஜூலை 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் பெருந் திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு பின்புறம் உள்ள பருத்தித்துறை வீதி மூடப்பட்டு ள்ளதால் சன நெரிசல் ஏற்படுவதாக கடந்த மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில்   நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா ஒழுங்கமைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை (10)  நடைபெற்றிருந்தது.

இதன்போது யாழ்.மாநகரசபை உறுப்பினர் நிஷாந்தன் உள்ளிட்ட சிலர், மேற்படி வீதியை முழுமையாக அடைக்கவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

மேலும் வீதியை மூடுவதால் சன நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறு நெருக்கடி நிலை உருவானால் ஆலய வளாகத்தில் இருந்து பருத்தித்துறை வீதியில் உள்ள நுழைவாயில் ஊடாக இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் ஆலய அறங்காவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வழமையான நல்லூர் பெருந்திருவிழா ஏற்பாடுகள் போலவே இம்முறையும் செய்ய தீர்மானித்து கூட்டம் நிறைவுக்கு வந்தது.   இதேவேளை கடந்த மாநகர சபை அமர்வில் வீதியை திறந்து விடுமாறு உறுப்பினர்கள், கோரிக்கை விடுத்ததுடன், திருவிழா ஏற்பாட்டுக் கூட்டத்திற்கு தம்மை அழைக்குமாறு கேட்டிருந்த போதும், மாநகர சபையில் பேசப்பட்ட அளவுக்கு   கூட்டத்தில் பேசப்படவில்லை.

மேலும் கடந்த ஆண்டு நல்லூர் மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழாவின்போது சன நெருக்கடி ஏற்பட்டு தள்ளு முள்ளாகி பக்தர்களால் பருத்தித்துறை வீதி தடை உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X