2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரித்தானிய பெண்ணுக்கு அவகாசம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில்  கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

எனவே அவர் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கெய்லி விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கைப்பற்றியிருந்தது.

விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .