2025 ஜூலை 19, சனிக்கிழமை

பலத்த காற்றில் சிக்கிய படகு : மீனவர் மரணம்

Freelancer   / 2025 ஜூலை 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார். 

இதன்போது படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார். 

கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகானது, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது பேருவளை கடலுக்கு அருகில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 

காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.

மேலும், இவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X