2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பம்

Editorial   / 2020 மே 11 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் அலுவலக நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் அலுவலக நடவடிக்கைகளுக்காக அழைக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் இணையத்தளத்தினூடாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்கியதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X