2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பஸ்களில் கட்டணம் செலுத்த புதிய முறை

Freelancer   / 2022 ஜனவரி 16 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுப் போக்குவரத்தில் நாணயப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், முற்கொடுப்பனவு அட்டை முறை மற்றும் கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் ஜனவரி 24ஆம் திதி சோதனைக்கு உட்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதன்அடிப்படையில், தெஹிவளை - பத்தரமுல்ல இடையேயான 163 ஆம் இலக்க தனியார் வழித்தடத்தில் இத்திட்டத்தை பரிசோதிக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பயணிகள் தமது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி பயணிக்கக்கூடிய வகையில்கியூஆர் முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

163 பஸ்ஸானது, காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் இயக்கப்படும் என்றும், சோதனையின் போது இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவர் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், புதிய முறைமைக்கு அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறிய சங்கத்தின் தலைவர், இந்த நடவடிக்கைக்கு அக்கறையின்மை இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பில், போக்குவரத்து அமைச்சர் மற்றும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து சேவையுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .