2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளுக்கான கொவிட் 19ஐ தடுக்கும் சுற்றுநிரூபம் வெளியீடு

Editorial   / 2020 மே 13 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில், பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்களைத் தயார்ப்படுத்துவது தொடர்பான சுற்றுநிரூபமொன்றை, கல்வி அமைச்சு நேற்று முன்தினம் (11) வெளியிட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, பாடசாலை வளாகத்தில் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில், சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே, இந்த சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களின் உள்நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்கள், வகுப்பறைகள், மலசலகூடங்களுக்கு அருகில், கை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொடர் நீர் வழங்களை உறுதிப்படுத்தல், தற்போது வேறு பயன்பாடுகளுக்காகப் பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதாயின், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க மூன்று தினங்களுக்கு முன்னரே, அவற்றை மீளக் கையளித்தல் போன்ற பரிந்துரைகள், சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தல், கிருமித் தொற்றுநீக்கல், கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், முதலுதவி அறையொன்றைப் பேணல், சமூக இடைவெளியைப் பேணல், மனநலத் தேவைகள் குறித்து அவதானம் செலுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள், இந்தச் சுற்றுநிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X