2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரதமர் ஊடகப் பிரிவு விளக்கம்

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிக்காததுடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிப்பதாக தெரிவித்து முன்வைக்கும் கருத்துகளுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை. அவர் வெளியிடும் கருத்துகள் தனிப்பட்ட ரீதியானதுடன்,  பிரதமர் அல்லது பிரதமர் அலுவலகம் அக்கருத்துகளை ஏற்கவில்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X