2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெலியத்த ஆயர்வேத வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Editorial   / 2020 மே 06 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த ஆயர்வேத வைத்தியசாலையின் பணியாளர்கள் இருவர், கொரோனா தொற்றாளர்கள் இருவருடன் தொடர்பிலிருந்துள்ளமை தெரியவந்துள்ளதால், இந்த வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்ததாகபெலியத்த சுகாதார வைத்திய அதிகாரி அநுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.


தங்காலை- வகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த தொற்றாளரின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில், பெலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றும் சாரதியும் அவரது மனைவியும் கலந்துகொண்டமை காரணமாகவே வைத்தியசாலையை தற்காலிகமாக மூடநடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X