Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ்வரி விஜயனந்தன்
நாட்டின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நிலை குறித்தே சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுடன் நேற்றைய தினம் (29) கலந்துரையாடிதாகத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, பொறுப்பான எதிர்க்கட்சி என்ற ரீதியில், கொரோனா தொற்றை ஒழிக்கத் தமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்குமென உறுதியளித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவித்த ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இரண்டு வாரம் செல்கையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்தார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்புத் தேவையா எனத் தாம் அவரிடம் வினவியதாகவும் இதன்போது அவர், சுகாதாரத் தரப்பினர் முன்னெடுக்கும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கோரியதாகக் கூறினார்.
விசேடமாக, முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதையும் அத்தியாவசியத் தேவைகளுக்கன்றி, அநாவசியமாக வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று கூறிய ஜாசிங்க, அதற்கு ஐ.தே.கவின் ஒத்துழைப்பை நாடினார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையில், தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க மாட்டோம் எனக் கட்சி சார்பில் தாம் பணிப்பாளரிடம் வாக்குறுதி அறித்ததாகக் கூறிய கமகே, முடிந்தளவு கொரோனா தொடர்பான பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் பரிசோதனைகளை அதிகரித்தாலே இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சிந்திக்கலாம் எனவும், ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பணிப்பாளர் நாயகத்திடம் எடுத்துரைத்ததாகக் கூறினார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago