2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பொறுப்பின்றி மக்கள் நடந்தால் 100 மரணங்கள் தினமும் பதிவாகும்’

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுபாடுகள் இன்று (21) தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகவும் பொறுப்புடன்
செயற்படுமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பொதுமக்களிடம் வேண்டுகோள்
விடுத்துள்ளது.

வேகமாகப் பரவும் தொற்றால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படக் கூடிய இந்தியாவின் டெல்டா
தொற்றும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள பின்னணியில் அரச வைத்திய
அதிகாரிகள் சங்கத்தால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அச்சங்கத்தின்
ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பிரசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், பயணக் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றித் தேவையற்ற காரணங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், பல வாரங்கள் நாட்டை மூடி வைத்தமைக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என்றார்.

தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சில குறைப்பாடுகள் காணப்படுகின்றமைக்கான காரணம் நாட்டை சில தினங்கள் முடக்கி வைத்திருந்தமையே எனத் தெரிவித்த அவர், எனினும் இன்று பயணக் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், மக்கள் நடந்துகொள்ளும் விதத்த்துக்கு அமைய, அதன் பிரதிபலன்களை இரண்டு வாரங்களில் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

பொறுப்புடன் செயற்பட்டால் தொடர்ச்சியாக நாட்டைத் திறக்க முடியும் என்றும் நாம்
ஆரம்பத்தில் நாளொன்றுக்கு ஒன்று, இரண்டு மரணங்கள் குறித்து கதைத்தோம். பின்னர் அது 10 - 15ஆக அதிகரித்து 25ஆகி தற்போது 50ஐக் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், நாம்
பொறுப்பின்றி செயற்பட்டால் தினமும் 100 மரணங்களை பதிவாவதைக் கண்டு ஆச்சிரியப்பட
முடியாது.

பல வாரங்களாக நாட்டை முடக்கி வைத்த்தால் ஏற்பட்டுள்ள அழுத்தமே கட்டுப்பாடுகள்
தளர்த்தப்படுவதற்கான காரணம் எனத் தெரிவித்த அவர், எனவே பொறுப்புடன் செயற்படுவது
அவசியம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X