2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மக்களின் பிரச்சினைகளை ரணில் தீர்க்கவில்லை’

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் பதவியேற்ற காலம் முதல் இதுவரையில் தனக்கு உதவிய எம்.பிக்களினதும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளாரே தவிர, மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைத்திட்டத்தை முன்வைத்ததாக தெரியவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன குழு எம்.பியான டலஸ் அழகப்பெரும சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற ஜனாதிபதி கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்தி வைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தின் போதே டலஸ் அழகப்பெருமன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் எங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் வசனங்களால் அழகு படுத்திய உரையாக இருக்கக் கூடாது என்றே நாங்கள் நினைக்கின்றோம். இவர் பிரதமராகி இன்னும் மூன்று நாட்களில் மூன்று மாதங்கள் ஆவதுடன், ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாதமாகவுள்ளது. 

இந்தக் காலப்பகுதியில் செயற்பாட்டில் இந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவர் முன்னெடுத்த நடவடிக்கை என்னவென கேள்வியெழுப்பினார். 

அது தொடர்பாக பார்த்தால் இந்த காலப்பகுதியில் அவர் அவரின் கட்சியில் தோல்வியடைந்த நண்பர்களின் பிரச்சினைகளையும், தனக்கு உதவிய எம்.பிக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். 

ஆனால் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைத்திட்டத்தை முன்வைத்ததாக தெரியவில்லை. 
வேலைத்திட்டங்கள், யோசனைகளை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. தங்களுடைய மற்றும் தங்களின் கட்சியின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நெருக்கடியை பயன்படுத்துவதை போன்றே தெரிகின்றது. 

இதேவேளை சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் குழுவாக அறிவித்துள்ளோம். நாங்கள் இது தொடர்பான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். மக்களின் கௌரவம், நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .