2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சக்தி அமைச்சு விளக்கம்

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களில் மின்பிறப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர். மின்பிறப்பாக்கி வசதிகள் இல்லாதவர்கள், “நாங்கள் என்ன செய்வது” என புலம்புகின்றனர்.

இந்நிலையில், அறிவிப்பொன்றை விடுத்துள்ள மின்சக்தி அமைச்சு, “மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.

 இதேவேளை, அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை மின்சார சபை, “கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ள​து என்றும்  நாடு முழுவதும் மின் விநியோகத்தை சீரமைப்பதற்கு சுமார் 3 மணிநேரம் ஆகும்” என அறிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .