2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

Editorial   / 2020 மே 19 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகிய இரண்டையும் வலுவிழக்கச் செய்யுமாறு வலியுறுத்தித் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் குழுவினால், உயர் நீதிமன்றத்தில் நேற்று (18), ஆராயப்பட்டதுடன், இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன்.

பின்னர், இன்று காலை 10 மணிக்கு பரிசீலனை நடவடிக்கை ஆரம்பித்த நிலையில் மேலதிக நடவடிக்கை நாளை (20) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X