2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், இந்த மாதம் இலங்கையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரி திங்கட்கிழமை (01) அன்று தெரிவித்தார்.

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவ மழை அதிகரித்து இருக்கும் என்று,  வானிலை ஆய்வுத்துறை இயக்குநர் மெரில் மெண்டிஸ் எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரர்க்கு தெரிவித்தார்.

"இலங்கையில் தற்போது பருவமழை பெய்யத் தொடங்கியது,எனவே டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழையும் அந்த நேரத்தில் மிகவும் அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சில  வேலை மழை பெய்யக்கூடும்" என்று அவர் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் ஆண்டின் இறுதி பகுதியில்  வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படுகின்றன. குறைந்த தாழ் அழுத்தம்  அல்லது சூறாவளி புயல் உருவாகும் என்ற செய்திகளை அவர் மறுத்தார்.

"தற்போது இலங்கைக்கு அருகில் எங்கு குறைந்த தாழ் அழுத்தம் அல்லது சூறாவளி புயல் உருவாகும் அறிகுறி எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில்,வானிலை ஆய்வுத் துறை வடக்கு,மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும்,கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்திலும் வரும் நாட்களில் மழை பெய்யும் என்று அதன் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்பில் கணித்துள்ளது.

ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பூனேரினில் அதிக பட்சமாக 42 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது, இரணைமடுவில்41 மில்லிமீற்றர், வவுனிக்குளம் 21.5 மில்லிமீற்றர், கிளிநொச்சியில் 20.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.

கொழும்பு மற்றும் நீர் ஏந்து பகுதிகள் உள்ளிட்ட பிற பகுதிகளில் திங்கட்கிழமை (01) அன்று மாலை வரை கணிசமான அளவு மழை பெய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X