2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மிருசுவில் வாள்வெட்டில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

Editorial   / 2020 மே 03 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (40) என்பவரே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X