2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டுமொரு கறுப்பு ஜூலையா ?

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் கறுப்பு ஜுலை போன்ற வன்முறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று (5)  பிரதமரின் உரை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 27 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 5, 6 ஆம் திகதிகளில் கரும்புலிகள் நினைவு தினத்தில் விடுதலைப்புலிகள் செய்ததை போன்று காட்டி வடக்கிலோ தெற்கிலோ வெளிநாட்டு உளவு நிறுவமொன்றினால் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளதா?  பாதுகாப்பு சபையில் பேசப்பட்டுள்ளதா? இல்லையென்றால் இது பொலிஸ்மா அதிபர் நினைப்பதா? இதனை சாதாரண விடயமாக கருத முடியாது. அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிகள் உருவாகியுள்ள காலமே இது. இந்த நேரத்தில் இவ்வாறான தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நேரத்தில் மனுஷ நாணயக்கார எம்.பி உரையாற்றும் போது, 9 ஆம் திகதி பெரிய வாகனங்கள் எரியலாம் என்றும், வீடுகள் எரியலாம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தடுப்பதற்காக அரசாங்கமே திட்டமிட்டு குழப்பகரமான வேலைகளை செய்யும் நோக்கத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகங்கள் எழுக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை திசை திருப்ப திட்டமிட்டு செயற்படுத்தப்படுகின்றனவா என்று கேட்கின்றோம்.

80 காலப்பகுதியில் இப்படி கிராமிய பாதுகாப்பு படையின் வேறு இராணுவம் இருந்தது. அவ்வாறான நிலைமையில் ஆரம்பமா என்ற சந்தேகங்களும் உள்ளன. இதன்படி திட்டமிட்டு அரசாங்கத்தினால் சம்பவங்களை உருவாக்க முயற்சிக்கின்றதாகவே தெரிகின்றது. 1983 காலத்தில் இப்படி நடந்தது. 

செட்டியார் தெருவில் தமிழர்கள் மீது தீவைக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  அதேபோன்று கறுப்பு ஜுலையையும் உருவாக்கினர். அவ்வாறான வன்முறைகளை மீண்டும் உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .