2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டது

Editorial   / 2020 மே 12 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி தூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை ஒழித்தல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பான மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை நீக்கியுள்ளது.

நிதிதூய்தாக்கலைத் தடுத்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் ஆகிய உபாய ரீதியான குறைபாடுகளுடன் கூடிய நாடாக 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இலங்கை அட்டவணைப்படுத்தப்பட்டது.

குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கைக்கென கால வரையறையுடன் கூடிய நடவடிக்கைத் திட்டமொன்று வழங்கப்பட்டது.

இந்த கால அவகாசத்துக்குள், நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் நடவடிக்கைத் திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிறன் மிக்கதும் உறுதியானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து குறித்த பட்டியிலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X