2025 ஜூலை 19, சனிக்கிழமை

மே 04 இல் தபால் சேவை வழமைக்குத் திரும்பும்

Editorial   / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டிலுள்ள தபால் நிலையங்கள் அனைத்தும், மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் வழமைபோல் இயங்குமென, அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

அஞ்சல், உப அஞ்சல் அலுவலகங்களில் மே மாதத்துக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், உதவித் தொகை, மீனவர் ஓய்வூதியம், விவசாய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துக் கொடுப்பனவுகளும் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவித்துள்ளார்.

தபால் விநியோகமும், அஞ்சல் அலுவலகங்களில் வழமை போன்று கருமபீட செயற்பாடுகள் நடைபெறுமெனவும், பொதுமக்கள், அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து அபராதத் தொகை செலுத்துதல், மாதாந்த மின்சார கட்டணப் பட்டியல், நீர்ப் பாவனைக் கட்டணப் பட்டியல், தொலைபேசிக் கட்டணப் பட்டியல் போன்ற கொடுப்பனவுகளையும் செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக, தபாலகங்கள் திறக்கப்படாததால் செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான தண்டப்பணப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு, சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார்.

கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம், இலங்கை மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் மருந்து வகைகளும் தொடர்ந்து விநியோகிக்கப்படும். 

அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்கள் கைகளை கழுவுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு, சமூக இடைவெளியையும் பேணுமாறும், அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X