2025 ஜூலை 19, சனிக்கிழமை

மேன்முறையீடுகள் குறித்து பரிசீலனை

Editorial   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை தற்போது பரிசீலித்து வருவதாக, சமுர்த்தி சேவை பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார். 

குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாட்டில் பணிபுரிவோரின் குடும்பங்கள், ஆடைத் தொழிற்சாலை, தனியார் துறை, மாதாந்த சம்பளம் கிடைக்கப்பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படாதென, அவர் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X