Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 19 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ்வரி விஜயனந்தன்
தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எனத் தெரிவித்த அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடமே சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார்.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் எவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினராக இருக்க முடியுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளமைத் தொடர்பில் தமிழ்மிரர் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனக்கு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளது உண்மையே. அமெரிக்கா மற்றும் இலங்கை இரட்டைப் பிரஜாவுரிமை தனக்கு உள்ளது எனத் தெரிவித்த அவர், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தல் ஆணைகுழுவின் உறுப்பினராக இருக்கக் கூடாதென்று எந்தவொரு சட்டத்திலும் கூறப்படவில்லை. சட்டத்தில் தடையுமில்லை என்றார்.
அத்துடன், இந்தக் கேள்வியை எழுப்பியவரது கட்சியின் முக்கிய முடிவுகள், தீர்மானங்களை எடுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இரட்டைப் பிரஜாவுரிமை உடைய ஒருவரே என்றும் எனவே, தன்னுடைய கட்சியில் இரட்டைப் பிரஜாவுரிமையுடைவரை முக்கிய பங்குகளில் வைத்துக்கொண்டு, எங்கள் விடயங்களில் ஏன் தலையிடுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago