2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மொட்டு உறுப்பினர்கள் சிலர் விசாரணைக்கு அழைப்பு

R.Maheshwary   / 2022 மே 29 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 9ஆம் திகதி “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம” என்பவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும்   விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாமல் ராஜபக்ஸ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,ரமேஸ் பத்திரண உள்ளிட்டவர்களே இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாளைய தினம் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வட்டரெக சிறைச்சாலை கைதிகளை, 9ஆம் திகதி நடந்த அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .