2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறைக்கு புதிய ரயில்

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ்வரி விஜயனந்தன்

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த போக்குவரத்துதுறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன, அதற்கபான பணிகளை ரயிலவே திணைக்களம் முன்னெடுத்த வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (5) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு ஊழியர்களின் வசதிக்காக இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானித்தாகத் தெரிவித்தார். தற்போது கல்கிஸையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜப்னா நைட் ரைடர் ரயில் சேவை வெற்றிகரமாக இயங்கி வருவதாகத் தெரிவித்தார். 

மேலும் தற்போது இலங்கை போக்குவரத்து சபையின் டிப்பாக்களில் தனியார் பஸ்களுக்காக எரிபொருள் வழங்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் வழங்குவதற்கு முறையொன்று ஏற்படுத்தப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .