2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யுவதியை தேடும் பணிகள் கைவிடப்பட்டன

R.Maheshwary   / 2021 ஜூலை 19 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை- டெவோன் நீர் வீழ்ச்சியை தனது மூன்று நண்பிகளுடன் பார்வையிட சென்ற போது நேற்று  (18) மாலை, குறித்த யுவதி நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தடுமாறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

 யுவதியைத் தேடுவதற்காக, இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இன்று  (19) காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனை கருத்தில் கொண்டும் மேற்படி யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து, காணாமல் போயுள்ள யுவதி லிந்துலை லென்தோமஸ் பகுதியில் வசித்த 19 வயதான மணி பவித்ரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .