2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

ரூ.100 இலட்சம் நன்கொடை வழங்கிய ’தாவூதி போரா’ சமூகம்

S.Renuka   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக  இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100  இலட்சம்  ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். 

உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா  முபத்தல் சைபுத்தீனின் சார்பாக இலங்கை தாவூதி போரா சமூகத்தின் தலைவர் இப்ராஹிம் சயினியினால்  இன்று செவ்வாய்க்கிழமை (02) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இதற்கான காசோலை கையளிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும்  நிவாரணம் வழங்குவதற்கும்  இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு போரா சமூக பிரதிநிதிகள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அதற்காக தமது நன்றியையும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X