2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் முதல் முரண்பாடு

Editorial   / 2022 மே 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையே முதலாவது முரண்பாடு முதல் நாளன்றே தோற்றியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர், பாராளுமன்றம் இன்று (17) முதன்முறையாக கூடியது.

இந்நிலையில், நாளொன்றை வீணடிப்பதைத் தவிர்க்க,  பெண் எம்.பி ஒருவரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.

எனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஆண் எம்.பி ஒருவரின் பெயரை பிரேரித்து முன்மொழிந்தது.  இது, பாராளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கு வழிவகுத்தது.

பிரதி சபாநாயகருக்கு ரோகினி கவிரத்னவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிய, ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுன.அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X