2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரூ.4.7 கோடி பெறுமதியான தங்கம் சிக்கியது

Freelancer   / 2022 ஜூலை 02 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 47 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 தங்க பிஸ்கட்கள் மற்றும் 4 தங்கக் துண்டுகள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் கொண்டுவரப்பட்ட 2 கிலோ கிராம் 98 கிராம் நிறையுடைய தங்கமே கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க விசாரணையை பிரதி சுங்கப் பணிப்பாளர் விஜேரத்ன பண்டார மேற்கொண்டதுடன், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபரை 50,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் பிரதி சுங்கப் பணிப்பாளர் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .