2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

வடக்கு - கிழக்குக்கு 16 இலட்சம் தடுப்பூசிகள்

Niroshini   / 2021 ஜூலை 27 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகையில், இன்று (27) நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங், இந்த தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தார்.

வடக்கு - கிழக்கைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு,  சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரால், ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் தடுப்பூசிகள், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X