Editorial / 2025 நவம்பர் 02 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - அனுராதபுரம் பிரதான வீதியில் உள்ள சிரம்பியடிய பகுதியில் சனிக்கிழமை (01) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் மன்னார், எருக்கலம்பிடியைச் சேர்ந்த நஸ்ருல்லா நஜீபா (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் 35, 46 மற்றும் 80 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி பயணம் செய்த கெப் வண்டி அதே திசையில் முன்னால் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு கெப் வண்டியின் பின் பக்கமாக சென்று மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முன்பாக பயணித்த கெப் வண்டியின் பின் பக்கமாக இருந்து பயணித்த நான்கு பெண்கள் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, படுகாயமடைந்த நான்கு பெண்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வயோதிப பெண்ணின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு வண்டிகளின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago