Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருள்களை விற்பனை செய்யும் அறியாத வலைதளங்ளில் இருந்து எந்தவொரு பொருள்களையும் கொள்வனவு செய்யவேண்டாம் என, கணினி அவசர தயார்நிலை குழு கோரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கு அமலில் இருக்கும் போது, இது தொடர்பாக கிட்டத்தட்ட 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, குறித்த குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்தார்.
இந்த போலியான வலைதளங்களில், ஓடர் செய்யும் பெருள்களை வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பதற்கம் கொள்வவை பூரணப்படுத்துவதற்கும் என, கொள்வனவாளர்களிடம் அவர்களது கடனட்டை மற்றும் வரவட்டை தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் எந்தவொரு பொருளும், குறிப்பிட்ட இடத்துக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் எனினும், கடனட்டை, வரவட்டை இலக்கங்கள், அந்த வலைதளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, பொருள்களைக் கொள்வனவு செய்யும்போது, இணையத்தள பணச் செலுத்தல்களை மேற்கொள்ளவேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்ட, மிகவும் பிரபலமான நிறுவனங்களில் மாத்திரம் பொருள்களைக் கொள்வனவு செய்யுமாறும் அவர் கோரினார்.
குறித்தவொரு நபரின் அட்டை தகவல்களபை் பயன்படுத்தி, மேலும் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும்போது, அட்டைக்கான உரிமையாளரின் அலைபேசிக்கு குறுந்தகல் கிடைக்கப்பெறும் என்பதால், அவ்வாறு கிடைக்கப்பெறும் பட்சத்தில், அந்தந்த வங்கிக்கு அறிவிக்குமாறும் அவர் கோரினார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago