2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

வௌ்ளத்தில் சிக்கி 15 இலட்சம் கோழிகள் பலி

Janu   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த 10 இலட்சம் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். 

 கோழிப் பண்ணைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தால் முட்டை உற்பத்தி சுமார் நாற்பது சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் முட்டை விலை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X