Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 07 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் ஆர்ஆர் வெங்கடபுரம் கிராமத்தில் உள்ள குறித்த இரசாயன தொழிற்சாலையில் இன்று (07) அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது.
இது, அங்கிருந்து 3 கிலோமீற்றர் தூரத்துக்கு பரவியதால் அப்பகுதிவாசிகள் இடையே, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வீதிகளில் சென்ற சிலர் மயங்கி விழுந்தனர்.
இவ்வாறு 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, குழந்தை உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
7 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago