2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலைக்குள் கத்தியுடன் நின்றவர் கைது

Editorial   / 2020 மே 15 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் சிறியளவிலான கத்தி ஒன்றினை வைத்திருந்த குற்றசாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (14) மாலை இருதரப்புக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் காயமடைந்ததாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்தில் அவர்களது உறவினர்கள் சிலர் ஒன்றுகூடியிருந்தனர். 

இந்த நிலையில் வைத்தியசாலை வளாகத்துக்குள் கத்தியுடன் ஒருவர் நிற்பதாக வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன்,
அவர் வைத்திருந்த சிறிய கத்தியை ம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X