2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஷவேந்திர சில்வாவுக்கு தடைகோரி இராஜதந்திர சந்திப்பு

Nirosh   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க வலியுறுத்தி பிரித்தானியாவில் உயர்மட்ட இராஜதந்திர சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கரோ மத்திய (Harrow Central) பிராந்தியத்தின் பாராளுமன்ற உறுப்பினரான  ஹரத் தோமஸ் ((Hon. Gareth Thomas MP) உடன் இணையவழியில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான கீத் குலசேகரம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய இராணுவத்தை நேரடியாக வழி நடத்திய ஷவேந்திர சில்வாவை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைப்பு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதால்,
அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய தருணம் வந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் ஷவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X