2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

Editorial   / 2020 மே 06 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில்,  இன்று (06) உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள அவரை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 06 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, அவரின் மனைவி மற்றும் சகோதரரால் இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X