2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எகிறியது எரிபொருள் விலைகள்

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருளின் விலைகளில் இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பொன்றை இலங்கை அறிவித்துள்ளது.

அந்தவகையில் 92 ரக ஒக்டேனின் விலையானது லீற்றரொன்றுக்கு 338 ரூபாயிலிருந்து 82 ரூபாயால் அதிகரித்து 420 ரூபாயாகக் காணப்படுகிறது.

ஓட்டோ டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 289 ரூபாயிலிருந்து 111 ரூபாய் அதிகரித்து 400 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், சுப்பர் டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 329 ரூபாயிலிருந்து 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகக் காணப்படுகின்றது.

தவிர, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையானது லீற்றரொன்றுக்கு 373 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரித்து 450 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், எரிபொருள் விலை மாற்றமானது இறக்குமதி, இறக்குதல், விநியோகித்தல், வரிகளை உள்ளடக்கியே விலை மாற்றமிருப்பதாகத் தெரிவித்த சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலாபம் கணக்கிடப்படவில்லை எனவும் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .