2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சபையை இழந்தது யானை: ரிஷாத் அணியின் ஆதரவில் மலர்ந்தது மொட்டு

Editorial   / 2021 ஜூலை 02 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழிருந்த  சேருவில பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.

கடந்த 7 மாதங்களாக இயங்காத நிலையிலிருந்த இந்த சபைக்கு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான பிரேரணை இன்று (2) முன்வைக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன் போது சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின்  உறுப்பினர் டப்ளியு.ஏ.ஜயசிரி, மேலதிக வாக்குகளால்  தெரிவு செய்யப்பட்டார். இதனூடாக, இந்த சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி இழந்தது.

மொத்தம் 15 உறுப்பினர்களைத் கொண்ட இந்த சபையில் ஐ.தே.கட்சி 6 உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4 உறுப்பினர்களையும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 3 உறுப்பினர்களையுமு் இலங்கை தமிழரசுக் கட்சி,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தலா ஓர் உறுப்பினரையும் கொண்டிருந்தன.

இன்றைய வாக்கெடுப்பின் போது, புதிய தவிசாளருக்கு ஆதரவாக, 9 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும்  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சேர்ந்த ஒருவரும் ஆதரவாக  வாக்களித்தனர். 

 ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வாக்கெடுப்பு இடம்பெற்ற ​வேளையில்,   திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள, சபையில்  பிரசன்னமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையான கட்சியே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .