2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கியுள்ள அவகாசம்

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.யசி

பொதுமக்கள் தமது கையிருப்பில் பணமாக வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதியானது 15,000 டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாகக் குறைப்பது குறித்து மத்திய வங்கி ஆராய்ந்து வருவதாகவும், சட்டவிரோதமாக அல்லது ஏதேனும் காரணங்களின் அடிப்படையில் அவ்வாறான வெளிநாட்டு நாணயத்தை சேகரித்து வைத்திருப்பவர்கள் இரண்டு வாரங்களுக்குள் வங்கியில் வைப்பு செய்யவோ அல்லது இலங்கை ரூபாவிற்கு மாற்றிக்கொள்ளவோ வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மத்திய வங்கியினால் நேற்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒருவர் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணய பெறுமதியை 10 ஆயிரம் டொலர்களாக கட்டுப்படுத்த முடிமான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப்படுகின்றது.  வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச்செய்யாமல் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும், இருவாரத்தின் பின்னர் வெளிநாட்டு நாணயத்தை கைவசம் வைத்திருப்பவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்படும்.

வெளிநாட்டு நாணயங்களை எமக்கு வழங்குவதன் மூலமாக தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஓரளவேனும் சமாளிக்கவும், வரிசையில் நிற்கும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். வெளிநாட்டு பணம் கையிருப்பில் இருக்குமானால் அதனை வங்கியில் வைப்பிலிட்டு அதற்கு ஏற்றால்போல் பெறுமதியான இலங்கை ரூபாவை பெற்றுக்கொள்வதே சிறந்த வழிமுறையாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X