2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின் கட்டண அதிகரிப்பு: ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 01 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு . 'பொதுக் கொள்கை திட்டங்களின்' கீழ் யோசனையை முன்வைக்க அமைச்சரவை தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் முறைமை சட்டத்தில் தனித்தனியாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சார சபையிடமிருந்து கிடைக்கப் பெற்றால் மாத்திரமே நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .