2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மைத்திரி பொறுப்புக்கூற வேண்டும்: சந்திரிக்கா

Freelancer   / 2023 ஜனவரி 09 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான பொறுப்பும் அவருடையது என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற போது, தலைமை பொறுப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .