2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அழகில் மகிழ்ச்சி…

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின்  பெரிய நீலாவணை, ஒலுவில், அட்டாளைச்சேனை, மத்திய முகாம், நாவிதன்வெளி, சவளக்கடை மற்றும் சம்மாந்துறை  பகுதிகளில் மயில் கூட்டங்களின் வருகை அதிகரித்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் வெளாண்மை செய்கை  அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ளது.

 இந்நிலையில், வயல் வெளிகளில் உள்ள  விசஜந்துக்களான பாம்புகள், பூராண்கள், தேள்கள் மற்றும் விசப்பூச்சிகளின் தொல்லை, மயில்கூட்டங்களின் வருகையால் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, விதைப்புக் காலங்களில் நல்லபாம்பு உள்ளிட்ட விசஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் எண்ணிக்கையற்ற மயில் கூட்டங்கள் வருகை தந்து விசஜந்துக்களை கட்டுப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .