2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

`இது சத்தியம்‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புவதில்லை என, கொட்டகலை யுனிப்பீல்ட் தோட்ட மக்கள் மெழுகுவர்த்தி சுடரின் முன்பாக சத்தியம் செய்தனர்.

டயகம சிறுமி இசாலினிக்கு நீதிக்கோரி, நேற்று (01) கவனயீர்ப்பு பேரணி, ஹட்டன்- ​நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை யூனிப்பீல்ட் பகுதியில் நடைபெற்றது.



இந்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள்,
ஓட்டோ சாரதிகள், என சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். சட்டத்தரணி நேரு கருணாகரன் தெளிவூட்டல்களை வழங்கினார்.

அத்துடன், கீழ் கண்ட மூன்று கோரிக்கைகளும் தமது பிரதேசத்தில் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என சட்டத்தரணி நேரு கருணாகரன் தெரிவித்தார்.

1. தமது பிரதேசத்தில் இருந்து 18வயதுக்கு குறைந்தவர்கள் தொழிலுக்கு
சென்றிருந்தால் அவர்களை சட்டரீதியாக உடனடியாக திருப்பி அழைப்பது.

2. 18 வயதுக்கு குறைந்தவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகி
இருந்தால் அவர்களை மீள பாடசாலையில் சேர்த்து கல்விக் கற்க வழி
செய்வது. அல்லது தொழில் முறை கல்வியை பெற்றுக் கொடுப்பது.

3. எமது பிரதேசத்தில் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவார்களாக இருந்தால்
அது தொடர்பாக உடனடியாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குத்
தெரியப்படுத்துவது. இதற்கும் அங்கிருந்தவர்கள் முழுமையான சம்மதத்தை
தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X