2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

Editorial   / 2022 ஜனவரி 19 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் கடற்படைத் தளபதி அத்மிரால் எம் ஷஹீன் இக்பால், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின்  தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை  ஶ்ரீ ஜயவர்தனபுரவில்  அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் இன்று (19) சந்தித்தார்.

  பங்களாதேஷ் கடற்படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின் போது, இரு நாட்டு  பிரதானிகளும் தற்போதைய கடல்சார் பிரச்சினைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான விடயங்கள், உலக அளவிலான மாற்றங்கள்,  கடற்படையின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். 

கலந்துரையாடலின் இறுதியில் பங்களாதேஷ் கடற்படை தளபதிக்கு, ஜெனரல் ஷவேந்திர சில்வா, விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.  

(படங்களும் தகவலும் இராணுவ ஊடக பணிப்பகம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .