R.Tharaniya / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான 'AKEBONO' செவ்வாய்க்கிழமை (28) அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
Destroyer வகைக்கு சொந்தமான 'AKEBONO' என்ற கப்பலானது 150.5 மீட்டர் நீளமும், 158 அங்கத்தவர்களை கொண்டதாகும், இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo ஆவார்.
'AKEBONO' கப்பலின் குழுவினர், தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளனர்
இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு, இலங்கை கடற்படை கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை (PASSEX) நடத்திய பின்னர், JMSDF AKEBONO கப்பல் ஒக்டோபர் 31 அன்று நாட்டை விட்டு புறப்படவுள்ளது.









அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .